பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஒருநாள் பயிற்சி செயலமர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு தம்பலகாமம்  பிரதேசசபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 4) இடம்பெற்றது.
கொழும்பு சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரும், அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் வைத்தியர் சி.சிவகுமார் உள்ளிட்ட வைத்தியர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களுக்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற செயலமர்வில், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் வைத்திய முறைகள் பற்றி மிகத்தெளிவான விளக்கங்களை சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தனும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரும் மற்றும் வைத்தியர்களான சி.சிவகுமார், டபிள்யூ.டி.சி.கே.கருணாரத்தினம் ஆகயோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் இறுதி நிகழ்வாக, பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் தங்களின் மருந்துப் பொருட்களை கொண்டு செல்லக்கூடிய பைகளும் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை, திருகோணமலை மாவட்ட பாரம்பரிய வைத்தியர்களுக்கான மாவட்ட குழுவொன்று தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Share this Article