பாரதிபுரத்திலுள்ள தூய யாக்கோப்பு ஆலயத்துக்கு ஒலிபெருக்கி, மின் விசிறி கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள தென் இந்திய திருச்சபை தூய யாக்கோப்பு ஆலயத்திற்கு ஆலய பிரசங்க, ஆராதனை மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக பூமணி அம்மா அறக்கட்டளையால் ரூபா. 1 லட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களும் மின் விசிறி போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளர்களும் கொடையாளர்களுமான எஸ்.ஜெறாட், H.ஜேம்ஸ், மேனகா அன்ரன், கமலா சுரேஸ், பாத்திமா டெஸ்மன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இவ் உதவித்திட்டம் அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் மூலம் கடந்த 14 ஆம் திகதி அன்று வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில்,தென் இந்திய திருச்சபையின் வண.பிதா.K.S.ஜோசப் (பிராந்திய குரு,வன்னி.), வண பிதா.P.S.ரொக்‌ஷான், பாரதிபுரம் திருச்சபை மற்றும் ஆலயத்தின் நிர்வாகிகளான செயலாளர் S.C.ஜெயம், பொருளாளர் திருமதி.P.கலாவதி, வாலிபர் சங்க உறுப்பினர்களான K.இராஜேந்திரன், P.பவித்திரன், J.கோமகன், G.கிருஸ்ணலீலா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this Article