பாடசாலை இந்து ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலத்தின் இந்து ஆலயம் மிக சிறப்பான முறையில் அனைத்துலக பல்துறை இணைப்பத்தின் ஊடாக வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளது.

வருடாவருடம் வித்தியாலயத்தின் நவராத்திரி பூஜைகள் மிக சிறப்பாக இடம் பெறுவதுடன் ஏடு தொடக்குதல் வாணி விழா என்பனவும் சிறப்பாக இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது இவ்வருடம் கொரோனா தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் விடுமுறையாக காணப்பட்டமையாலும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே மிக பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

நவராத்திரி பூஜை நிகழ்வினை முன்னிட்டு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தின் ஊடாக இவ் ஆலயம் சிறப்பாக வர்ணம் பூசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செயற்றிட்டத்தினை மேற்கொள்வதற்கு நெடுந்தீவு மண்ணை சார்ந்த லண்டனில் வசிக்கும் நல்லதம்பி விஜிக்குமார் மற்றும் ரட்ணராசா (காந்தி) ஆகியோர் நிதி பங்களிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article