பயணப் பையில் கேரள கஞ்சா!- வவுனியாவில் கடற்படை சிப்பாய் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படை சிப்பாய் ஒருவர் வவுனியா நகரில் வைத்து நேற்றுமுன்தினம் (ஜூலை 14) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து கேரள கஞ்சாவை பஸ்ஸில் கொண்டு வருவதாக வவுனியா தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலையடுத்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் இருந்து பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share this Article