பதிவாளர் நாயகம் திணைக்கத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் பிரதிக்கிணைகளுக்கான கட்டணங்களில் மாற்றம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பதிவாளர் நாயகம் திணைக்கத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் பிரதிக்கிணைகளுக்கான கட்டணங்களில் மாற்றம்.

பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரிவின் மூலம் வினியோகிக்கும் பிறப்பு,விவாக மற்றும் இறப்புச் சான்றிதழுக்கான நடைமுறையில் உள்ள கட்டணங்கள் 2021/04/01 லிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 08/2021 இலக்கம் கொண்ட சுற்றுநிரூபம் மூலம் மாற்றம் காண்கின்றது.

தேடுதல் தேவையற்ற விண்ணப்பத்திற்காக 120/=
தேடுதல் தேவைப்படும் விண்ணப்பத்திற்கு 250/=

மற்றும் ஏனைய24, 27, 27(அ), 52(அ), மற்றும் 36 க்கான பிரதிக்கினை ஒன்றுக்கான கட்டணமாக 60/= திருத்தம் மேற்காள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவாகப் பதிவுக்கான கட்டணம் 5000 ரூபாவாக திருத்தம் மேற்கொள்ள எத்தனிப்பதாகவும். அரசாங்க கட்டணமாக 1500 ரூபாவும் பதிவாளர்களுக்கான கட்டணமாக 3500 ரூபாவும் வழங்க எத்தனிப்பதாகவும் கூறப்பட்டதோடு குறித்த நடைமுறைக்கான சுற்றுநிரூபம் விரைவில் வெளிவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article