பட்டதாரிகளை ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப் போட்டிப் பரீட்சை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க கொழும்பு செய்திச் சேவை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article