நெடுந்தீவுக்கு விரைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் – இளங்குமரன் எம்.பி.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் விரைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்புக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு போன்ற கடல் கடந்து தூரக் கிராமப்புறப் பகுதிகளில் எரிபொருள் நிரப்புநிலையம் அமைவது மக்கள் வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரியபலன் தர உள்ளது.

இதனால் விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளுக்குத் தேவையான எரிபொருள்எளிதில் கிடைக்கும் போக்குவரத்து சிரமம் குறையும்

உள்ளூர் தொழில், வணிகம் ஊக்கமடையும் பொதுமக்களுக்கு நேரமும் செலவும்மிச்சமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இத்திட்டத் நெடுந்தீவின் அபிவிருத்திக்கான ஒரு முக்கியமானமுன்னேற்றமாகக் கருதப்ப்டுவதுடன் எதிர்வரும் ஒக்டோபர் 04 இல் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கானஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Article