நெடுந்தீவு வெல்லை வீதி புலம்பெயர் உறவின் உதவியுடன் துப்பரவாகிறது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு வெல்லை புனித யூதா ததேயு ஆலய திருநாளினை முன்னிட்டு வெல்லை வீதியில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வீதியின் இருமருங்கிலும்  காணப்பட்ட  பற்றைகள் முட்புதர்கள் என்பன அகற்றப்பட்டு துப்பரவு செய்யும்பணி இடம்பெற்றுவருகின்றது.

பாரியளவில் வீதியின் இருமருங்கிலும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் நாளாந்தம் இப் பகுதியூடாக கடற்தொழிலுக்கு செல்வோர் , மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியங்களைக்கு உள்ளாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 05 இல் வெல்லை புனித யூதா ததேயு ஆலயதிருநாள் இடம்பெறவுள்ள நிலையில்  நெடுந்தீவு மத்தி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பாரிய இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நெடுந்தீவு மத்தி சனசமூக அங்கத்தவரும் தற்போது புலம்பெயர்ந்து உறவுமான பீற்றர் லூகிஸ் இன் நிதிப்பங்களிப்புடன் முன்மாதிரியான இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article