நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் முச்சக்கர வண்டி மோதியதில் பலியாகிய குடும்பஸ்த்தரின் இறுதி நல்லடக்கம் நேற்றையதினம்  (ஜூன்17) நெடுந்தீவில் இடம்பெற்றது.

நேற்று மாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் ஆராதனை இடம்பெற்று மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பர்ணாந்து  சகாயதேவதாஸ் (குமார் – வயது 59) என்பவரே கடந்த ஜூன்15 இரவு நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே  வேகமாக வந்த முச்சக்கரவண்டி  மோதி உயிரிழந்தவரார்.

இவரது இறுதி வணக்க நிகழ்வின்போது கிளரீசியன் துறவறசபையின் இலங்கைக்கானமுதல்வர் அருட்கலாநிதி ஜெயசீலன் அடிகளார், சபையின் குருக்கள், அருட்சகோதரர்களுடன் நெடுந்தீவு பங்குத்தந்தை  மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article