நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள்உலங்குவானூர்தி மூலம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக,  நெடுந்தீவில் அமைக்கப்பட்ட 03?வாக்களிப்பு நிலையங்களில் இருந்து,  வாக்குப்பெட்டிகளை   கையளிப்பதற்காக வழமைபோல உலங்குவானூர்தி மூலம் வாக்கெண்ணும்நிலையத்தில் ஒப்படைப்பதற்காக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்நேற்றைய தினமும் (நவம்பர் 14) மாலை கொண்டுவரப்பட்டது.

நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம்      வருகை தந்த சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமானமருதலிங்கம் பிரதீபன் மற்றும்  உதவித்தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ், மற்றும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்கமறரறும் அதிகாரிகள் ஆகியோா் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாக்குப் பெட்டிகளுடன் நேற்று முன்தினம் கடற்படை படகுமூலம் வாக்குப் பெட்டிகளுடன் பணியாளர் குழு நெடுந்தீவினை சென்றடைந்தருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article