நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பானகலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவு உறவுகளைஒன்றிணைத்து  04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை நடாத்த இருக்கும்“நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் நெடுந்தீவு மங்கையற்கரசிவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தகலந்துரையாடலில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்வரும்ஆவணி மாதம் இடம்பெறவிருக்கும் நெடுவூர்த் திருவிழா ஏற்பாடுகள்தொடர்பாகவும் குறித்த திருவிழாவை சிறப்பாக நடாத்தி முடிப்பதுதொடர்பாகவும் இதில் பாடசாலையின் பங்களிப்பு தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டது.

Share this Article