நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் இயற்கை எய்தினார்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.பரராஜசிங்கம் சின்னத்துரை அவர்கள் இயற்கை எய்தினார்.

நெடுந்தீவின்பால் மிகுந்த அக்கறை கொண்டவரும் பல தடவைகள் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடி பல்வேறு செயற்றிட்டங்களை நெடுந்தீவில் மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவரும் அமைப்பின் கடந்தகால சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியதுடன் கனடா மக்கள் ஒன்றியத்தின் வளர்ச்சியிலும் பல்வேறு பணிகளை மிகச் சிறந்த முறையில் செயற்படுத்தி சேவை ஆற்றியதுடன் அனைவரும் மதிக்கத்தக்க அன்பும் பண்பும் நிறைந்த மண்ணின் பெருமையுடையோன் ஆவார்.

இவரது தலைமைத்துவத்திலேயே கனடா மக்கள் ஒன்றியத்தின் 25வது வருட வெள்ளி விழா நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this Article