நெடுந்தீவு மகாவித்தியாலய விளையாட்டு அணிகள் தீவக வலய மட்டத்தில் சாதனை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தீவக வலய மட்ட விளையாட்டு நிகழ்வு 2025 இல் நெடுந்தீவு மகாவித்தியாலய ஆண்கள் அணி இன்று (ஏப்ரல22) இடம்பெற்ற கடற்கரை கரப்பந்து (Beach volleyball) போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும், தீவுக்கும் பெருமை சேரத்துள்ளனர்.

இப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய அணியை இறுதிப் போட்டியில் சந்தித்து காரைநகர் வியாவில்  வித்தியாலயம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

இதேவேளை அண்மையில் நடைபெற்ற வலயமட்ட சதுரங்கப் போட்டியில்  17 வயதுப் பிரிவினர் வலயமட்டத்தல் முதலாம் இடம் பெற்றுள்ளனர். முதல்தடவையாக நெடுந்தீவிலிருந்து பங்குபற்றியதுடன் அதில் வெற்றிபெற்றுபாடசாலைக்கும், மண்ணிற்கும் பெருமைசேர்த்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article