நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (03/06) வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நெடுந்தீவுக்கு இன்று சென்றபோது பாடசாலை நூலகம் திறந்து வைக்கப்பட்டதுடன் , நூலகத்திற்குத் தேவையான ஒரு தொகுதி நூல்களும் அவரால் வித்தியாலய அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அடங்கிய குழுவினரை , அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் , நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந.பிரபாகரன் என பலரும் உடன் இணைந்திருந்தனர்.