நெடுந்தீவு புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா – 2025 எதிர்வரும் சனிக்கிழமை (ஓகஸ்ட் 30) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ள திருப்பலியில் செப். 07 மாலை நற்கருணைப் பெருவிழாவும் மறுநாள் திங்கட்கிழமை (செப். 08) காலை மரியன்னையின் பிறப்பு பெருவிழாவும் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.