நெடுந்தீவு குழந்தை இஜேசு இளையோர் ஒன்றியத்தின் ஒழுங்குபடுத்தலில்இன்றையதினம் (ஓகஸ்ட் 09) இரத்ததான முகாம் நெடுந்தீவு புனித பற்றிமாஅன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் பிரசன்னத்திலும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும்குறித்த செயற்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

உயிர் காக்கும் உன்னதமான பணியை நடாத்துவதில் பங்காற்றிய யாழ் போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவினர் குழந்தை இயேசு இளையோர்ஒன்றியத்தினர் மற்றும் குருதிக்கொடையாளர்கள் ஆகியோருக்கு தனதுநன்றிகளையும் செபங்களையும் நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன்அடிகளார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.