நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் மாணவர்களுக்கான “வாசித்துஇன்புறுவோம்” செயலமர்வு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  அனுசரணையில்  நெடுந்தீவு பிரதேசசெயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட  “வாசித்து இன்புறுவோம்” விழிப்புணர்வுநிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது.

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் துணைத் தலைவராகவும் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தின் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் இருந்த சாரதாதேவி கிருஷ்ணதாஸ் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

பாடசாலை புத்தகங்களிற்கு மேலதிகமாக மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை அறியச்செய்தல் என்பதே குறித்த நிகழ்வின் கருப்பொருளாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article