நெடுந்தீவு பிரதேச சபையின் செயலாளராக புஸ்பராஜா துஜிஸ்காந் இன்றைய தினம் (செப்.29) தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபைக்கு நீண்டகாலமாக நிரந்தர செயலாளர் நியமிக்கப்படாமல் பதிற்கடமை அடிப்படையிலேயே பிரதேச சபை செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் நிரந்தர செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.