நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றத்தினரால் கௌரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றத்தினரால்  நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் இருந்து கா.பொ. த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், வாழ்வாதாரத்தில் நலிவுற்ற தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பண உதவி வழங்கும் நிகழ்வும்  நேற்றைய தினம் (ஓகஸ்ட் 25) இடம்பெற்றது.

நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றத்தின் நெடுந்தீவு கிளைத் தலைவர் அ. புஸ்பகுமார்  தலைமையில் நெடுந்தீவு மகாவித்திய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நெடுந்தீவு அம்பா வித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை சோபன்ரூபஸ் அடிகளார் , நெடுந்தீவு இந்து மதகுரு பிரம்மஸ்ரீ புவனேந்திரசர்மா அவர்கள், நெடு. மகாவித்தியாலய ஆசிரியர் பி.துசானா , நெடு. சைவப்பிரகாச வித்தியாலய  ஆசிரியர் இ.ஜனாசா ஆகியோருடன் உதயசூரியன் விளையாட்டுக்கழக தலைவர், பொருளாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் விருந்தினர்கள் மன்றத்தின் சார்பில் மாணவர்களை கௌரவித்துஅவர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article