நெடுந்தீவு பல்கழைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை சார்ந்து தற்போது இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியற்கல்லூரிகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாணவர்களுகளுடன் நண்பர்கள் வட்டத்தின் நிர்வாகத்தினர் கலந்துரையாடல் நிகழ்வொன்றினை மேற்கொண்டனர்

இக்கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் குறிப்பிட்ட பல்கலைக்கழக கல்வியியற் கல்லூரி மாணவர்கள் இணைந்து கொண்டனர்


எதிர்காலத்தில் நண்பர்கள் வட்டத்தின் கல்விச் சேவையில் பல்கழைக்கழக மாணவர்களது பங்களிப்பு தொடர்பாகவும் அவர்கள் அனைவரும் இணைந்து நெடுந்தீவு பல்கழைக்கழக மாணவர்களாக ஓர் அமைப்பாக செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது

கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகுதி பல்கழைக்கழ மாணவர்களையம் இணைத்து எதிர்வரும் சனிக்கிழமை 19ம் திகதி மீண்டும் ஓர் கலந்துரையாடல் நிகழ்வினை மேற்கொள்வது எனவும் தீர்;மானித்துள்ளனர்

எனவே பல்கழைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில கல்வி கற்கும் மற்றும் பல்கழைக்கழகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளோர் தயவாக இக்கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.

மேலதிக தொடர்புக்கு 077-1816052

Share this Article