நெடுந்தீவு நெழுவினியான் தேரேறி அருள்பாலித்தார் இன்று!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025 இல் இன்றையதினம் (ஏப்ரல்14) திங்கட்கிழமை தேர்த்திருவிழா பெருந்திரளான பக்தர்களின் அரோகரா ஒலியுடன் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

 

காலையிலேயே பூர்வாங்க கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு  புது வருடப் பிறப்பான இன்றையதினம் மதியம் ஒரு மணியளவில்  விநாயகப்பெருமான் தேரேறி வலம் வந்து அருள்பாலித்தார்.

இதேவேளை  தேர்த்திருவிழாவின் போது பல அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தியதுடன, உள்ளூர், வெளிமாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களைச் சேரந்த பெருமளவிலான பக்தர்கள் தேர்த்திருவிழாவிலே கலந்து கொண்டிருந்தனர்.

நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழாவில் இன்று மாலை 5.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article