நெடுந்தீவு- நடமாடும் சேவையில் வாகன பரிசோதனையும் இடம்பெறும் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் வேண்டுகோளிற்கமைய  மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் சாரதி அனுமதிப் பத்திரம்வழங்குவதற்கான நடமாடும் சேவையானது இன்று வெள்ளிக்கிழமை (ஏப். 26) நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் இடம்பெறவுள்ளது.

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கலுக்கான நடமாடும் சேவைக்கு மேலதிகமாக

1) நீண்டகாலம் வரி அனுமதிப்பத்திரம் பெறாதவர்கள்

2) தொலைந்த வாகனப் புத்தகம் பெறுதல்

3) வாகன ஆசனங்களை அதிகரித்தல்

4) வாகன நிறம்மாற்றுதல்

போன்ற தேவைகளுக்காக வாகனப் பரிசோதனைகள் செய்யவேண்டியவர்கள் இன்றைய தினமே வாகன பரிசோதனையினை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இருந்து வாகனங்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு இன்றைய தினமே இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊரும் உறவும் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article