நெடுந்தீவு ஜெயா நற்பணி மன்றம் வழங்கும் ஏரோதியாளின் சபதம் நாட்டுக்கூத்து நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு ஜெயா நற்பணி மன்றம் வழங்கும் ஏரோதியாளின் சபதம் தென்மோடிநாட்டுக்கூத்து  நாளையதினம் (ஓகஸ்ட் 29) மாலை 7.00 மணிக்கு நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகள் திறந்தவெளி அரங்கில் அரங்கேறவுள்ளது.

கலாபூசணம் , யாழ்முத்து, கலைமாமணி என பல விருதுகளை தன்னகத்தே கொண்ட அண்ணாவியார் சைமன் ஜேசுதாசன் அவர்களின் நெறியாள்கையில் நெடுந்தீவின்   சிறந்த கலைஞர்களை ஒன்றிணைத்து “ஏரோதியாளின் சபதம்” எனும் தென்மோடி நாட்டுக்கூத்து அரங்கேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து நாட்டுக்கூத்தினை காணவரும் கலாரசிகர்களுக்கான இலவச இருவழி போக்குவரத்து ஒழுங்கும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article