நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா- 2025  இன் இறுதி போட்டி நிகழ்வு நாளையதினம் (பெப். 18) பி. ப.  2.00 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் ச.ஞானகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள  நிகழ்வில் நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலயகுரு பிரம்மஶ்ரீ சிவபாலசர்மா  அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன் சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கி, நெடுந்தீவு கிளை முகாமையாளர் இ.சிந்துஜன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜெ.ஜெனற்ஜான்சன், நெடுந்தீவு மங்கயற்கரசி வித்தியாலய ஓய்வுநிலை அதிபர் திருமதி லோ. நகுலசிறி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share this Article