நெடுந்தீவு சா்வதேச அமையத்தினால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சா்வதேச அமையத்தின் நிதியுதவியுடன் நண்பா்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினரால் அண்மையில் 20 வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து பனங்காணி வரையான பிரதான வீதிகளில் காணப்படும் முக்கிய இடங்களினை மையப்படுத்தி மின் குமிழ்கள் பொருத்தியதன் ஊடாக மின்னொளி பரப்பி நெடுந்தீவு சா்வதேச அமையத்தினா் உத்தியோகபூர்வமாக தமது பணியினை ஆரம்பித்து வைத்துள்ளனா்.

இந் நிகழ்வானது  தீவக மைந்தன் சுரேஷ் செல்வரட்ணம் அவா்களை ஞாபகப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது நெடுந்தீவு சா்வதேச அமையத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share this Article