நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய நூலகத்திற்கான புத்தகங்கள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தகங்கள் கையளிப்பு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி இணைந்த தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் கடந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு,செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு பிரதேசசெயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட நெடுந்தீவு கிழக்கு சனசமூக  நிலைய இரகுபதி நினைவு நூலகத்திற்காக 100,000.00 ரூபா பெறுமதியான மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் நேற்றையதினம் (மே15) நெடுந்தீவு கிழக்கு சனசமூக  நிலைய  மண்டபத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினரால் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு,செலவுத் திட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article