நெடுந்தீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவு 15 ஆம் வட்டாரத்தில் , குயிந்தாவுக்கு செல்லும் வீதியில் கிராவெட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான “பரயந்தரை” எனும் காணியினை கடற்படைக்கு முகாம் அமைத்தலுக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் இன்று (25/08) நிலஅளவை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளரது சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளருமான நடராஜா காண்டீபன் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் குறித்த இடத்திற்கு சென்று எதிர்பினை வெளியிட்டதைத் தொடர்ந்து அளவீட்டு முயற்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில்குறித்த காணி உரிமையாளராக பெயர் குறிப்பிடப்பட்டவர் காலமாகிய நிலையில் அவரது பிள்ளைகள் நெடுந்தீவிலும் வன்னிப்பகுதியில் வசித்துவரும் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட காணி சுவீகரிப்பு முயற்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை உண்டுபண்ணியுள்ளது
வடக்கு கிழககு தமிழர் தாயகப் பகுதியில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காணி அபகரிப்பு நடவடிக்கையானது நெடுந்தீவையும் விட்டுவைக்கவில்லை என மக்கள் அரசின்மீது அதிருப்த்தி வெளியிட்டுள்ளனர்.