நெடுந்தீவு இளம் தாயின் உடல் கண்ணீரின் மத்தியில் நல்லடக்கம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி (வயது 25) என்ற இளம் தாயினுடைய இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (ஒக்.12) காலை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில்  உறவுகளின் கண்ணீர் மழையின் மத்தியில் இடம்பெற்றுள்ளது.

பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி இவருக்கான அஞ்சலியை செலுத்தியதுடன் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டிருந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

வீட்டில் இடம்பெற்ற இறுதி வழிபாடுகளின் பின்னர் நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில்  ஆராதனை இடம்பெற்று பின்னர் பிரதான வீதி வழியாக ஊர்வலமாக மத்தி கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு  நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர் கடந்த வியாழக்கிழமை (ஒக்.09)  இரவு யாழ் போதனாவைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துடன்  பிறந்த பெண் குழந்தை வைத்தியசாலை பராமரிப்பில் நலமுடன் உள்ளமை குறிப்பிடதக்கது.

Share this Article