நெடுந்தீவில் வேட்பாளர் அறிமுகத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள்,மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்து கொண்ட வேட்பாளர் அறிமுகம் , சந்திப்பு நிகழ்வு நெடுந்தீவில் இன்று (ஏப்ரல்26) காலை  நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நெடுந்தீவு  பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றதுடன்,  அமைச்சர் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும், ஆட்சிக்கு வந்து இதுவரை தம்மால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றியிருந்தார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இந்து மதகுருமார், மற்றும் கட்சி சார் உறுப்பினர்கள், பொதுமக்கள் என இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article