நெடுந்தீவில் தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு – நெடுந்தீவு பிரதேச செயலகஅறிவித்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போது  வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததினால் கடும் மழை மற்றும் காற்று காரணமாக இயல்புநிலை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்காக மூன்று பாடசாலைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நெடுந்தீவு மத்தி றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி, நெடுந்தீவு கிழக்கு சுப்ரமணிய வித்தியாலயம், நெடுந்தீவு மேற்கு சைவப்பிராகசவித்தியாலயம் ஆகியன தற்காலிக முகாமாக தயார்செய்யப்பட்டுள்ளன.

பொது மக்கள்  தற்காலிக தங்குமிடங்களில் தங்குவதற்கு தேவையேற்படின்உங்கள் பிரிவிற்கான கிராம அலுவலரைத் தொடர்புகொண்டு தங்கள் அருகில்உள்ள பாடசாலைக்கு சென்று தங்க முடியும் என நெடுந்தீவு பிரதேச செயலக செய்தி குறிப்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article