நற்குண முன்னேற்ற அமைப்பினால் நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள ஆண் மற்றும் பெண்களுக்கான தடகள விளையாட்டு (Athletics) பயிற்சி வழங்க ஏற்பாடாகியுள்ளது.
யாழ் நகரில் இருந்து சிறப்பு பயிற்ச்சியாளர்கள் ஒழுங்கமைப்பட்டு அவர்களால் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும், ஞாயிற்றுக்கிழமை காலையும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.
இப் பயிற்சிகளில் இணைய ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் தங்கள் விபரங்களை நெடுந்தீவில் உள்ள நற்குண முன்னேற்ற அமைப்பின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 0775901858 என்னும் WhatsApp இலக்கத்திற்கு தனிப்பட்ட தகவலாகவோ பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.