நெடுந்தீவில் சீனாவிற்கு 80 ஏக்கர்! யாழ் பழைய கச்சேரி சீனாவிற்கா? சிறீதரன் எம்.பி கேள்வி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நெடுந்தீவில் சீனாவிற்கு 80 ஏக்கர்! யாழ் பழைய கச்சேரி சீனாவிற்கா? அதற்காகவா நாமல் யாழ் வந்தார்? சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி!!
யாழ்ப்பாணத்தின் தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கும். தமிழ் மக்கள் எவ்வளவு பிரச்சனைகள் என்றாலும், தமது தொப்புள் கொடி உறவான இந்தியாவுடன்தான் நிற்பார்கள்.
இந்தியாவிற்கு எதிரான உங்கள் சீன்டு முடியும் நடவடிக்கைகளை நிறுத்தி, நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்துங்கள் என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் யாழ்ப்பாணம் வந்த பாகிஸ்தான் தூதுவர் மண்டைதீவில்தான் தங்கியிருந்துள்ளார். மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளை பார்வையிட்டுள்ளார். இது எமக்கு பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு அண்மையிலுள்ள அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் நிறுவனமொன்று ஹொட்டல் கட்ட முயன்ற போது, கடந்த காலங்களில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதா?
நெடுந்தீவில் 40 ஏக்கர் காணி வீதம் சீனாவை சேர்ந்த இரண்டு தனி நபர்களிற்கு வழங்கப்படவுள்ளது. இது சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட போகிறது. அதே போல, ஒல்லாந்து கால யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டிடத்தையும் சீன நிறுவன ஒன்றிற்கு நட்சத்திர விடுதி அமைக்க வழங்கும் முயற்சிகள் நடக்கிறது. அதற்காக தான் நாமல் அன்மையில் யாழ் வந்தார் என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
Share this Article