யாழ் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஏற்பாட்டில் “நெடுந்தீவு சுகாதார விழா” இன் ஓர் பிரிவாக நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் இன்றையதினம் (செப். 12) போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் சுகாதார கல்வி தொடர்பான நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.




இன்றைய நிகழ்வின்போது யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன், யாழ். மருத்துவபீட பீடாதிபதி வைத்தியர் சுரேந்திரகுமார், நெடுந்தீவு பிரதேச்சபை தவிசாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் என். பிரபாகரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமண் பத்திரண, வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் மருத்துவதுறை அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.