நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கலுக்கான நடமாடும் சேவை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான அறிவுறுத்தல் கலந்துரையாடல் நாளையதினம் (ஏப்ரல்23) காலை 9.00மணிக்கு ஊரும் உறவும் நிறுவன அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

நடமாடும் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்26) நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதால்  அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலே நாளை இடம்பெறவுள்ளதால்  பதிவுகளை மேற்கொண்டோர் நாளையதினம் தவறாது கலந்துகொள்ளுமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன இணைப்பாளர் அறிவித்துள்ளார்.

தற்போது மோட்டார் போக்குவரத்து திணைக்கள நடமாடும் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளபோதும் நெடுந்தீவில் இருந்து சென்று வருதல் , தங்குதல் ஆகிய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஊரும் உறவும் நிறுவனத்தினர் விடுத்த எழுத்துமூலமான கோரிக்கையின் அடிப்படையில் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article