நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பித்தோருக்கான இருநாள் பயிற்சி ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக  நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சைக்கான பயிற்சி வகுப்பு  இன்றையதினம் (ஏப்ரல் 24) மாலை  இடம்பெற்றதுடன்,  நாளையும் (ஏப். 25) காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரையும் நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள தேவ சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சசிகா சாரதி பயிற்சி பாடசாலையின் வளவாளர்களால் இப் பயிற்சி நெறி மேற்கொள்ளப்பட்டதுடன்

ஊரும் உறவும் நிறுவன ஏற்பாட்டில் இலவசமாக இப் பயிற்சி வகுப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நடமாடும் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல்26) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article