நெடுந்தீவில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவரும் பிணையில்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் நேற்று (ஏப்ரல்18) இரவு சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவரை ஊர்காவற்றுறை நீதிமன்று இன்று பிணையில் விடுவித்துள்ளது.

பொதுமக்களின் தகவலுக்கமைய இரு சக்கர உழவு இயந்திரத்துடன் இருவரை மாடுகளுடன், நெடுந்தீவு பொலிசார் கைது செய்து இன்றையதினம் (ஏப்ரல்19) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான வழக்கு எதிர்வரும் ஏப்ரல்24 இடம்பெறும் என தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..

நேற்று (ஏப்ரல்18) இரவு நெடுந்தீவு தெற்கு வெல்லைத் தரவைக்கு அண்மையில்உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இரு சக்கர உழவியந்திரத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று மாடுகளுடன் , இருவரை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

வெல்லைப்பகுதியை அண்டிய காட்டுக்குள் மாடுகள் அதிகமாக போய் வருகின்றஒற்றையடிப் பாதையில் கயிற்றினால் தடம் வைத்து மாடுகள் பிடித்து அவற்றைசட்டத்திற்கு புறம்பாக இறைச்சியாக்கி விற்பனை செய்துவருகின்ற நிலையில் அப்பகுதி இளைஞர்கள் நேற்று இரவு காத்திருந்து மாடு ஏற்றி வந்த இரு சக்கர உழவியந்திரத்தினை பின் தொடர்ந்து நெடுந்தீவு பொலிசாரின் உதவியுடன்அவர்களை பிடித்தனர்.

பொலிசார் வருவதை அறிந்ததும் அவர்கள் குறி உள்ள ஒரு மாட்டினை  தூரத்தி விட குறி இல்லாத இரண்டு மாடுகள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் , சந்தேக நபர்கள் இருவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையிலேயே இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நெடுந்தீவின் மிகத் தொன்மையான அடையாளமாகிய பசுக்கள் இவ்வாறு வகைதொகையின்றி அழிக்கப்படுகின்றமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும்அதிர்வலையினை ஏற்படுத்தி உள்ளதோடு இந்த இளைஞர்களையும் பொலிசாரையும்மக்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article