நெடுந்தீவில் இதேநாளில் கொலையுண்டவர்க்கு சம்பவ இடத்தில் அஞ்சலி ( 22.04.2023 – 22.04.2024)

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எப்பாவமும் அறியாமல் தங்கள் உயிர்களை கடந்த வருடம் இதே நாளில் அவலமாக பறிகொடுத்த நெடுந்தீவின் துன்பியல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினைத்தை நினைவுகூரும் வகையில் குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் குழுவினரால் இன்று மாலை (ஏப். 22 ) சம்பவம் இடம்பெற்ற வீட்டருகில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இந்துமத குரு, தென்னிந்திய திருச்சபை போதகர் மற்றும் குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் குழுவினர் என பலர் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

01. நாகநாதி பாலசிங்கம்

02. பாலசிங்கம் கண்மணிப்பள்ளை

03. வேலாயுதம் நாகரத்தினம்

04. கனகரத்தினம் பூரணம்

05. காரத்திகேசு நாகசுந்தரி

06. சுப்பிரமணியம் மகாதேவன்

ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article