நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஆக்கத்திறன் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 04,05,06 மாணவர்களுக்கான சித்திரம், கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள் முறையே வகுப்பு ரீதியாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள்
தரம் – 04 (சித்திரப் போட்டி)
-
தலைப்பு: எனது வீட்டுத் தோட்டம்
-
A4 தாளில் எந்தவொரு வர்ண ஊடகத்தையும் பயன்படுத்தலாம்.
தரம் – 05 (கவிதைப் போட்டி)
-
தலைப்பு: முதியோரை மதிப்போம்
-
20 வரிகளுக்குக் குறையாமல், 30 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.
தரம் – 06 (கட்டுரை போட்டி)
-
தலைப்பு: கல்வியால் உயர்வோம்
-
அதிகபட்சம் 100 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

தொடர்புக்கு- 0766186316 – 0776827747