நெடுந்தீவில் BISHOP’S CUP – 2025 தொடர்பில் கழகங்களுடன் கலந்துரையாடல்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாடாக இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள அருட்கலாநிதி ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை கிண்ணம் (BISHOP’S CUP – 2025 ) தொடர்பாக விளையாட்டுக் கழக நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல் நெடுந்தீவு பங்குப்பணிமனையில்இடம்பெற்றது.

நெந்தீவு பங்குத்தந்தை அருட்திரு ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவில் உள்ள விளையாட்டுக் கழக நிர்வாகத்தினரும் , ஏற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

கத்தோலிக்க திருஅவையும் தமிழ்பேசும் நல்லுலகும் கொண்டாடுகின்றநெடுந்தீவின் மைந்தனின் நாமத்துடன் உயரிய கெளரவத்துடன்நடாத்தப்படுகின்ற குறித்த நிகழ்வானது இவ்வருடம் மாணவர்களிடையேயும்இளைய சமூகத்தினரிடயேயும் அறிவுசார் போட்டிகளாகவிரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பங்குத்தந்தை கருத்து தெரிவிக்கையில்,

திருஅவையை அதிகம் நேசித்து அதை  தனது வாழ்வில் காண்பித்த ஆயனின்உயரிய சிந்தனைகளை முன்மாதிரிகையாக கொள்ளவேண்டும் என்பதேஇத்தகைய போட்டிகளின் நோக்கமாகும் எனவும் ,

கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட BISHOP’S CUP 2024 நிகழ்வை நினைவுபடுத்தி குறித்த நிகழ்விற்கு  ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகளையும்இதன்போது தெரிவித்திருந்தார்.

Share this Article