நெடுந்தீவு மண்ணின் மைந்தன் மறைந்த இராயப்பு யோசெப் ஆண்டகை அவர்களின் நினைவாக இடம்பெறும் Bishop Cup 2025 தொடருக்கான சீருடை அறிமுகம் செய்யும்நிகழ்வு நேற்றையதினம் (ஓகஸ்ட் 16) மாலை நெடுந்தீவு பங்குப் பணிமனை வளாகத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில்இடம்பெற்ற நிகழ்வில் நடைபெறவுள்ள நான்கு குழு விளையாட்டுகளுக்குமாக கலந்துகொள்ளும் ஐந்து அணிகளதும் அணித் தலைமைகள் கலந்து கொண்டு தமக்கான சீருடைகளைப் பெற்றுக்கொண்டனர்.
