நெடுந்தீவின் பிரதான வீதிக்கு மின்விளக்குகள் இல்லை- விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்­தீ­வின்  பிரதான வீதிக்கு மின்­வி­ளக்­குகளை பொருத்­தித் தரு­மாறு பிர­தேசமக்­கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். நெடுந்தீவின் பிரதான வீதியின் பல இடங்கள் மின் விளக்குகள் இன்றி இருளில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிர­தே­சத்­தின் ஒரு­சில பகுதிகளில் மட்­டும் பொருத்தப்பட்ட நிலையில் மக்கள் அன்­றா­டம் பாவிக்­கும் பல வீதிகள் இரு­ளில் மூழ்­கியே காணப்­ப­டு­கின்­றன.

நெடுந்தீவு மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி வீதிகள் குண்­டும் குழி­யு­மாகஇருப்பதால் இரு­ளில் பய­ணிப்­ப­வர்­க­ள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் வாக­னங்­க­ளும் சேதம்    அடை­கின்றன. எனவே, சம்­பந்­தப்­பட்டவர்கள் இது­ தொ­டர்­பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

Share this Article