நெடுந்தாரகை சேவை பயணத்தடை நீக்கப்பட்ட நாட்களில் வழமை போல் இடம் பெறும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தற்போது பயணத்தடை நீக்கப்பட்டமையால் பொதுப்போக்குவரத்துக்கள் யாவும் மேற்கொள்ளப்படுகின்றது

அதற்கமைய நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் பயணிகள் போக்குவரத்திற்கு இலகுவாக நெடுந்தாரகைப் படகு வழமைபோல் சேவையில் ஈடுபடும்

காலை 06.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

மீண்டும் மாலை 03.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் நெடுந்தாரகைப் படகு மீண்டும் மாலை 4.30 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

கொரோனா தாக்கத்தில் இருந்து தங்களை; பாதுகாத்து மக்கள் போக்குவரத்து செய்வது நன்று

Share this Article