நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடியவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், நானாட்டனில் வீடுகளில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடி வந்தவர் இன்று (மார்ச் 1) பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் சிலவற்றில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டு வந்தன.

சந்தேகமடைந்த மக்கள் அருவி ஆற்றங்கரையில் உள்ள வீடு ஒன்றைச் சோதனையிட்டபோது திருடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேகநபரைக் கைது செய்தனர்.

Share this Article