நாளை முதல் பேருந்து கட்டணமும் அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நாளை முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் வரித் திருத்தம் காரணமாக பேருந்து கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியேற்படுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாளை முதல் அமுலாகும் வகையில். சோற்றுப்பொதி, ப்ரைட் ரைஸ், கொத்துரொட்டி உள்ளிட்ட உணவுகளில் விலையை 25 ரூபாவினாலும், தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நீர் கட்டணமும் 3 சதவீதத்தால் அதிகரிக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று அறிவித்தது.

முக்கிய தொலைபேசி சேவை வழங்குனர்களும் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்களையும் மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Share this Article