நானு ஓயா விபத்தின் பிந்திய தகவல்கள்! – 7 பேர் உயிரிழப்பு 50 பேர் காயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நுவரெலியா – நானுஓயாப் பகுதியில் நேற்று (ஜனவரி 20) நடந்த வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று நுவரெலியா வைத்தியசாலை வட்டாரத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

பஸ் ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கொழும்பு – தேஸ்டன் பாடசாலையின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ், நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான ரதெல்ல குறுக்கு பள்ளத்தாக்கு பாதையில் மேல் இருந்து கீழ் நோக்கி கொழும்புக்கு பயணித்துள்ளது.

இந்த பஸ் நானுஓயா குறுக்கு வீதியில் கோவில் ஒன்றுக்கு அருகிலுள்ள வளைவு ஒன்றில் பயணித்த போது, அதன் தடையாளி உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கிப் பள்ளத்தாக்கு பாதையில் கீழ் இருந்து மேல் நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்றுடன் மோதியதுடன், அதற்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.

இதன்காரணமாக, சிற்றூர்தியிலும், பஸ்ஸிலும் பயணித்த 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நானுஓயா – ரதெல்ல குறுக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியினூடாக பயணிக்கும் வாகனங்கள் பிரதான வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

Share this Article