நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அவசர இலக்கம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய மெஹெயும) தகவல்களை வழங்குவதற்காக இன்று (ஜனவரி 2)  இவ் இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

071 859 88 00 என்பதே குறித்த அவசர தொலைபேசி இலக்கமாகும்.

இந்த தொலைபேசி இலக்கத்துடன் கூடிய ஸ்டிக்கர் இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article