நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் குறைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று (மார்ச் 29 )நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

92 ஒக்ரெய்ன் பெற்றோல் 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் விலை 80 ரூபாய் குறைக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 325 ரூபாவாகவும், 95 ஒக்ரெய்ன் பெற்றோல் 135 குறைக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 375 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 45 ரூபாவால் குறைக்கப்படுவதுடன் புதிய விலை 465 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 10 ரூபாவால் குறைக்கப்படுவதுடன் இதன் புதிய விலை 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Share this Article