நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழா – 2025 எதிர்வரும்26.06.2025ம் திகதி தொடக்கம் 11.07.2025ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்காரணமாக திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிற்கான போக்குவரத்துஒழுங்கமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 25.06.2025ம் திகதி தொடக்கம்07.07.2025ம் திகதி வரையான காலப்பகுதியில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர்கட்டுமானப் பொருட்களை குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்ல முடியும் என்பதுடன்.

08.07.2025ம் திகதி தொடக்கம் 11.07.2025ம் திகதி வரையான காலப்பகுதியில்எந்தவிதமான கட்டடப் பொருட்களையும் குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கு கொண்டு செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்திருவிழாவினை முன்னிட்டு மாவட்டச் செயலகத்தில் கடந்த 17.06.2025 நடைபெற்ற முன்னாயத்த கலந்துரையாடல் தீரமானத்திற்கு அமையவே இவ் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article