நயினாதீவு மாணவர்களுக்கு சைவசமய பாடப் பரீட்சை நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம் பெருமையுடன் நடாத்தும் சைவ சமயபாடப் பரீட்சை நாளை(மார்ச் 26) காலை 8 மணிக்கு நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நயினாதீவு மதுரைமீனாட்சி அம்மன் ஆலய உயர்திருவிழாவை முன்னிட்டு இந்தப் பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தரம் 10 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தரம் 4 மாணவர்களுக்கு புலமை பரிசில் மாதிரிப் பரீட்சை நடைபெறும்.

தரம் 12-13 வகுப்புகளுக்கு பொது அறிவுப் பரிட்சை நடைபெறும்.

ஏனைய வகுப்பு மாணவர்களுக்கு சமயபாடம் மூன்று தவணைகளையும் உள்ளடக்கியதாக நடைபெறும்.

Share this Article