நயினாதீவில் நாளை சிவராத்திரி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் மகா சிவராத்திரி விழா நாளை சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நயினாதீவு தெற்கு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கலை அரங்கில் நடைபெறவுள்ளது.

நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் சா.விபுலானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் விழாவில் நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத் தலைவர் க.பரமலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இதில் ஓய்வு பெற்ற கிராம அலுவலர் இ.குலசிங்கம் கௌரவிக்கப்படவுள்ளதுடன் மாணவர்களின் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

Share this Article